22-1-2012ம் திகதி அபிராமி அம்மன் தரிசனம்

துர்க்கேஸ்வரம் திருத்தலம், அம்பாளின் உறைவிடம். சக்தியின் நிறைவிடம குறைவிலாச் செல்வம் தரும் இறைஇடம். இந்த ஸ்தலத்தில் தை அமாவாசை தினத்தில் அம்பாள் அபிராமியாகக் காட்சி அளிக்கிறாள். இந்த நாளில் பக்தர்களின் விருப்பங்களை ஈடேற்றி வைக்கிறாள். இதன் காரணமாக, தை அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர் இங்கு கூடுவர். அபிராமியை வழிபாடு செய்வர். அம்பாளின் அருள் பெறுவர். அபிராமி அந்தாதி என்னும் தமிழ் மந்திரங்களை அம்மனுக்கு சமர்ப்பணம் செய்வர்.

22-1-2012ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசை வருகிறது. துர்க்கேஸ்வரத்தில் அபிராமிப் பட்டர் விழாவில் அபிராமி தரிசனம் தரவிருக்கிறாள். கடந்த 10 ஆண்டு களிலும் இவ்விழாவில் பங்கேற்று வழிபட்டு நிறைந்த பலன்களைப் பெற்ற பல அடியார்களும் தம் அனுபவங்களைக் கூறும்போது, மெய்யுருகும். சிறப்புமிகு இந்த நாளிலே, இவ்வாண்டு மேலும் விஷேட வழிபாடுகள் நிகழவிருக்கின்றன.

இந்த நாளிலே, வழமைபோல, இம்முறையும் சங்கீத கலாநிதி, மிருதங்க சங்கீத கலாவித்தகர், இசைக்கலைமணி திரு. வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இசை நிகழ்ச்சியை தருகிறார். அவருடன் இணைந்து வயலின் வித்துவான் ஏ. ஜெயதேவா அவர்களும், மிருதங்க வித்துவான் இரா. வாசுதேவன் அவர்களும இசையமுதம் தருகின்றனர்.
மாலை 6.00 மணிக்கு சங்கலப்பம்
இரவு 6.30 மணிக்கு பூஜை ஆரம்பம்
இரவு 7.00 மணிக்கு அபிராமி அந்தாதி பாடல் சமர்ப்பணம்
இரவு 8.30 மணிக்கு அபிராமி அம்மன் தரிசனம்
இரவு 9.00 மணிக்கு ஆசீர்வாதம், நிறைவு
.